Scream and punch : Birthday WhatsApp Review: Perambalur Police Investigation!

பெரம்பலூர் இலங்கைகள் அகதிகள் முகாமை சேர்ந்தவர் சூனிக்கண்ணன் @ சுதர்சன். புதிய பேருந்து நிலையம் பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளனர். வடக்குமாதவி சாலையில் உள்ள தர்சினி நகரில் சூனிக்கண்ணன் மனைவி மிதுனரூபி (38), மகன் புவியரசு (18). ஆகியோர் குடியிருந்தும் வருகிறன்றனர்.. புவியரசு பெரம்பலூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் வேளையில் கடந்த 27ம் தேதி பிறந்தநாள் வீட்டில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளுக்காக பெரம்பலூர் முழுவதும் புவியரசிற்கு அதிகப்படியான பேனர்களும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதனை புவியரசும், நண்பர்களும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துள்ளனர். இதை வாட்சப் குழுவில் பார்த்த பெரம்பலூர் திருநகரை சேர்ந்த வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவன் கவுதம் (21) பார்ட்டியை சேர்ந்த கவுதம், வாட்ஸ்அப் குழுவில் நீ என்ன பெரிய ஆளா என்று ஒரு கருத்தை பதிவிடுகிறார். இதற்கு புவியரசு என்பவர் என் பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது என்று ஒரு கருத்தை பதிலுக்கு பதிவிடுகிறார். இதனால் புவியரசுக்கும் கவுதமிற்கும் வாட்ஸ் அப் மற்றும் நேரிலும் கருத்து மோதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் புவியரசின் தந்தை சூனிக்கண்ணன் கவுதமன் அம்மா சாந்தி என்பவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகே வைத்திருக்கும் பிரியாணி கடைக்கு அவரது மகன்களுடன் நேரில் வந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மிரட்டிச் செல்கிறார்.

இந்நிலையில் இன்று சூனி கண்ணன் மற்றும் அவரது மகன் புவியரசு ஆகியோர் கவுதமை நேருக்கு நேர் மோதி யார் பெரிய ஆள் என்று தெரிந்து கொள்ளலாம் வா என்று அழைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சுமார் 4:30 மணியளவில் கவுதம் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் உடன் இருசக்கர வாகனத்தில், சூனிக்கண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் வந்து கைகலப்பு ஏற்பட்ட சமயத்தில் சூனிக்கண்ணன் தரப்பினர் அபிஷேக்கை வெட்ட முற்படும் போது தனது இடது கையால் தடுத்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.


தகராறில் மேலும், புவியரசு மற்றும் புவியரசின் அத்தை ஜெய நந்தினிக்கு முறையே வலது மற்றும் இடது முழங்கையின் உள்பக்கமாக காயம் ஏற்பட்டது.

இதில் அபிஷேக் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்களால் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த சூனிக் கண்ணனும், அவரது குடும்பத்தினருக்கும், அதேசமயம் கவுதமும் வர இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு மேற்படி சூனிக் கண்ணன் குடும்பத்தினர் கவுதமை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தற்போது கவுதமும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் டி.எஸ்.பி மற்றும் , பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வழக்குப் பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப்பில், பிறந்த நாள் குறித்து பதிவிட்டதால், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பெரம்பலுர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட சிறிய கத்தியை பையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சமுதாயம் சினிமாவை சீரழிந்து வரும் சம்பவம் எதிர்கால சமுதாயத்தை பாழாக்கும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!