Secondary Special Exam: Score presented certificates to 29 Oct
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஜுன் 2016 மேல்நிலைப் சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 21.07.2016 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ள தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் 2016 பருவத்தில் முதன் முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் ஜுன் 2016 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதர தேர்வர்களுக்கு ஜுன் 2016-ல் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழினை 29.09.2016 அன்று காலை 10.00 மணி முதல் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.