Seized 4 thousand bundle of sand smuggling near Paramathivellore in Namakkal district

நாமக்கல் : பரமத்தி வேலூர் அருகே கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் மூட்டை மணலை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த பொன்மலர் பாளையம், கொந்தளம், எஸ்.கே.மேட்டூர் பகுதிகளில் காவிரி ஆற்றிறிலிருந்து மணலை மூட்டைகளில் கட்டி, இரு சக்கர வாகனங்களில் கடத்துவதாக புகார் வந்தது. இதையொட்டி நாமக்கல் கனிமவளத்துறை கூடுதல் இயக்குனர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள், போலீசார் நடத்திய திடீர் சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,000க்கும் அதிகமான மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு சக்கர வாகனங்களில், மணல் மூட்டைகளை ஏற்றி வந்த மர்ம நபர்கள், மூட்டைகளை கீழே போட்டு விட்டு வாகனங்களில் தப்பினர். மேலும், மணலை எளிதாக கடத்திச் செல்ல, அந்த இடத்தில் வெளிச்சத்திற்காக, மின் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் மணல் கடத்தலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!