Self Employment Training for Young People on Veterinary Care

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு. செங்கோட்டையன் விடுத்துள்ள தகவல் :

தமிழ்நாடு கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் இளைஞர்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர ஊர்தி ஓட்டும் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மூன்று மாத பயிற்சியும், பயிற்சி முடித்தபின் கருவூட்டல் உபகரணங்களும் அரசு மூலம் வழங்கப்படும்.

பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த நபர்கள் அரசு கருவூட்டல் நிலையங்கள் இல்லாத ஊர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் கருவூட்டல் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

விருப்பம் உள்ள நபர்கள் பெரம்பலூர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, துணை இயக்குநர் அலுவலகத்தை (பெரம்பலூர் கால்நடை மருந்தக வளாகம்) வேலை நாட்களில் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225799 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!