Serial negligence in bridge construction; I will also join the people’s struggle: Parivendar MP Warning!


பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில், நடந்த வரும் பாலம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக அலட்சியமாக நடந்து வருகிறது. இன்று எம்.பி பாரிவேந்தர், அந்த வழியாக பெரம்பலூர் வருவதை அறிந்த பொதுமக்கள், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் நடந்து மேம்பாலம் பணி குறித்து முறையிட்டனர். மேலும், குறிப்பிட்ட காலத்தில் கட்டிமுடிக்கப்படாமல் கடந்த 8 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இணைப்பு சாலையிலேயே அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், வயதானவர்கள், பெண்கள் சாலையை கடக்க கடும் சிரமம் அடைகின்றனர். இதை குறிப்பிட்டும் மனுவில் தெரிவித்து இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் ஆமை வேகத்தில் நடந்து வந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கிடப்பில் உள்ளதை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு மக்களின் சிரமத்தை அறிவுறுத்தினார்.
பின்னர், செய்தியார்களிடம் தெரிவித்ததாவது: இந்த பாலம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எடுத்துரைத்துள்ளேன். தொடர்ந்து அலட்சியம் காட்டினால், போராட்டங்களில் குதிப்பதாக தெரிவித்த மக்களுடன் நானும் களத்தில் அவர்களுடன் ஒருவனாக போராடுவேன் என தெரிவித்தார். அப்போது, ஐ.ஜே.கே வை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!