Service flaw: Water purity company 10 thousand Penalty: in Perambalur Consumer Court

சேவை குறைபாடு வழங்கிய வாட்டர் பியூரிபையர் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் அபராதம்: பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

அரியலூரை சேர்ந்தவர் வெள்ளமுத்து (வயது 65). விவசாயி. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ம் தேதியன்று அரியலூரில் உள்ள ராமநாதன் மெட்டல் ஸ்டோர் கடையில் ரூ.15 ஆயிரத்து 700-யை கொடுத்து தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரத்தை (வாட்டர் பியூரிபையர்) வாங்கினார். வாங்கி வீட்டில் வைத்து உபயோகபடுத்திய போது பழுதாகி முறையாக இயங்கவில்லை. இது குறித்து எந்திரம் வாங்கிய கடையில் சென்று பழுது நீக்கியோ மாற்றியோ கொடுக்க வெள்ளமுத்து கோரினார். ஆனால், இதை அலட்சியம் செய்து வந்துள்ளார். மேலும், திருச்சியை சேர்ந்த சாய்சங்கீத் என்ற டீலரிடமும் கேட்டுப் பார்த்தார். ஆனால், இரு நிறுவனங்களிடமும் இருந்து எவ்வித நடவடிக்கையும், இதனால், மனம் நொந்து போன வெள்ளமுத்து அரியலூர் ராமநாதன் மெட்டல் ஸ்டோர், திருச்சி சாய்சங்கீத் ஏஜென்சி நிறுவனம், ஹிந்துஸ்தான் யுனிலிவர் ப்யூரிட் என்ற நிறுவனத்திற்கும், வழக்கறிஞர் மூலம் விளக்கம் நோட்டு நோட்டீஸ் அனுப்பினார். எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வெள்ளமுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை நீதிபதி கலியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி அமர்வு விசாரித்தது, விசாரணையில் அரியலூர் ராமநாதன் மெட்டல் ஸ்டோர், திருச்சி சாய்சங்கீத் ஏஜென்சி நிறுவனம், ஹிந்துஸ்தான் யுனிலிவர் ப்யூரிட் என்ற நிறுவனங்கள் சேர்ந்து சேவை குறைபாட்டிற்கும், மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவிற்கும் வழங்க உத்திரவிட்டு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!