Special Abishek at the Sri Viswakarma Jayanti Festival in Namakkal
நாமக்கல் நகரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
செப்டம்பம் 17ம் தேதியை ஸ்ரீ விஸ்வகர்மா தெய்வத்தின் பிறந்த தினமாக பாரதப்பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையொட்டி நாமக்கல் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க இளைஞரணி பேரவையின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் மணிக்கூண்டு அருகில் ஸ்ரீ விஸ்வகர்மா சுவாமியின் படத்திறப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீ தியாகராஜர் பேரவை தலைவர் கோட்டை கோபால் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தங்கவேல் ஆச்சாரியார் சுவாமி படத்தை திறந்து வைத்தார். விஸ்வகர்மா சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பிரமுகர்கள் சரவணன், கோவிந்தன் மூர்த்தி உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஏகாம்பர காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான விஸ்வகர்ம சமூகத்தினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.