Special Bank Credit Fair for the Disabled: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நாளை காலை 09.30 மணிக்கு நடைபெற உள்ளது.
வங்கி கடன் கோரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கி கடன் வழங்க ஆவணச் செய்யப்படும். இதை மாற்றுத் திறனாளிகள் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.