Special camp for inclusion in the voter list with Disabilities: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (பொ) அழகிரிசாமி விடுத்துள்ள தகவல் :

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், தங்களது ஊனத்தின் தன்மையை தாமாக முன்வந்து தெரிவிக்கும் பட்சத்தில் அதனை படிவம் 6-இல் குறிப்பிட்டு பெறலாம் எனவும், ஊனத்தின் தன்மையை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நாளன்று, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எவ்வித இடையூறுமின்றி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒரு பகுதியாக, தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2019 காலகட்டத்தில் (01.09.2018 முதல் 31.10.2018 வரை), தகுதியுடைய மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் எதிர்வரும் 28.10.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட 147.பெரம்பலூர் தனி சட்டமன்ற தொகுதி மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

மேற்படி சிறப்பு முகாமின் போது, இதுவரை வாக்காளராக பதிவு செய்திடாத மாற்றுத்திறனாளிகள் உரிய ஆதார ஆவணங்களுடன் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். மேலும், வாக்காளராக பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது ஊனத்தின் தன்மையை (கண் பார்வையற்றோர், பேச்சு மற்றும் கேட்கும் திறனற்றோர், உடலியக்க இயலாமை, பிற காரணங்கள்) தெரிவிக்க முன்வரும் பட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையின் விவரத்தினை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!