Special Summary Revision timeline extension of the voter list

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

இந்திய தேர்தல் ஆணையம் 03.10.2017 முதல் 31.10.2017 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2018-ன்போது பெயர் சேர்த்தல் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெற ஆணையிடப்பட்டது.

தற்போது விண்ணப்பங்கள் பெறுவதற்கான கால வரையறையினை 30.11.2017 வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிடப்பட்டுள்ளது. ஆகவே 01.11.2017 முதல் 30.11.2017 வரை விண்ணப்பங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் பெறப்படும்

இந்த முகாம்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) 15.11.2017 முதல் 30.11.2017 வரை வீடு வீடாகச் சென்று விடுபட்ட நபர்களை கண்டறிந்து விண்ணப்பங்கள் அளித்து பெற உள்ளனர். மேலும், சிறப்பு சுருக்க திருத்த காலத்தில் விடுபட்டு போன புதிய வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் இதற்கு முந்தைய சிறப்பு சுருக்கத் திருத்தத்தில் விடுபட்டு போன வாக்காளர்களுக்கு படிவம் 6 வழங்கி அதனை பெறுதல், 01.01.2018 அன்று தகுதியாக உள்ள இளம் வாக்காளர்களிடமிருந்து படிவம் 6 பெறுதல், 01.01.2019 அன்று தகுதி பெற உள்ள வாக்காளர் பட்டியல் சேகரித்தல், நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குதல் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு படிவம் 7 வழங்கி பெறுதல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் உள்ள பதிவுகளில் யாருடைய பதிவுகளில் திருத்தம் உள்ளதோ அவர்களுக்கு படிவம் 8 வழங்கிப் பெறுதல், கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி குடும்ப வாரியாக பெறுதல், கைபேசி மூலம் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களுக்கு இ-மெயில் செய்தி அனுப்புதல், குடும்ப உறுப்பினர்கள் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர் பற்றிய தகவல்களை பெறுதல் உள்ளிட்ட பணிகள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி 01.01.2018 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதி வாய்ந்த நபர்கள் பெயர் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து கொள்ளவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!