Sports competition for persons with disabilities: Perambalur MLA Tamilselvan inaugurated.

பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.

இவ்விளையாட்டுப் போட்டிகளில் கை,கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்) -குழவிற்கு 5 நபர்கள், மேஜைப் பந்து -குழுவிற்கு 2 நபர்கள் ஆகிய விளையாட்டுகளும் பார்வையற்றோர்கள் பிரிவில் கையுந்துபந்து (அடாப்டட் வாலிபால்) -ஓரு குழுவிற்கு -7 நபர்கள் விளையாட்டும்,

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் எறிபந்து -ஒரு குழுவிற்கு -7 நபர்கள் விளையாட்டும், காது கோளாதோர் பிரிவில் கபடி -ஒரு குழுவிற்கு 7 நபர்கள் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

மேலும், விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றது.

மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மாரியப்பனுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ரூ.1 கோடி பரிசு அறிவித்து பெருமைப்படுத்தினார்.

எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களின் தன்னம்பிக்கையை இழக்காமல் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாட்டு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், என பேசினார்ஃ

அதனைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகளான கலைச்செல்வன், அம்பிகாபதி, ரமேஷ், தீபா ஆகியோர்களுக்கு தேசிய அளவில் பெற்ற சாதனைகளை பாராட்டி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் நினைவுப் பரிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க.கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!