Sri Varadharaja Perumal Temple consecration Festival in Perambalur
பெரம்பலூர் காமராஜ் வளைவு திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீமதனகோபால் சுவாமி பெயரால் எழுந்தருளிய ஸ்ரீவரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் மற்றும், கருடாழ்வார், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், சந்தன மாரியம்மன், உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில், இன்று குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு முகூர்த்தகால் நடப்பட்டு, 3 ந்தேதி தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நேற்று மாலை, அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டு முதல்கால பூஜைகள் நடத்தப்பட்டு நேற்றிரவு அஷ்டபந்தனமருந்து சாற்றுதலும், இன்று காலை 6 மணிக்கு 2வது கால யாக பூஜையும், ருத்ரம், சமகம், நாராயண சுத்தம், துர்கசுத்தம், மகாபூர்ணாகுதி, மற்றும் மகா தீபாராதனைகள் தொடர்ந்து காலை 9.40 மணி அளவில் நவக்கிரக பூஜை, ஹோமங்களுடன் மகா கும்பாபிசேகமும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டனர்.