State and District Level Manimegalai Award for the year 2021-22: Perambalur Collector Information.

பெரம்பபலூர் கலெக்டர் (பொ) அங்கையற்கன்னி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு, ஊரகவளர்ச்சி துறை அமைச்சரால், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் வரும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறை மாற்றம், நிதிவரவு-செலவு, மேற்கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்பணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபை பங்கேற்பு, மாற்றுதிறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதியை சேர்ந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு,

வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் மார்ச் 29 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதிவரை அளிக்கலாம். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!