State-level skater selection competition: started today in Perambalur.
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், தமிழ்நாடு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் தெரிவு போட்டிகள் இன்று தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த தெரிவு போட்டிகளின் தலைமை நடுவராக முனைவர் பீட்டர் சுப்பு ரெட்டி செயல்பட்டு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறார்.
இப்போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தெரிவு பெறும் மாணவிகள் டிசம்பர் மாதம் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் 01.10.2017 அன்று சாலையோர ஸ்கேட்டிங் போட்டிகளும் 02.10.20117 அன்று மாணவர்களுக்கு ரோலர் ஸ்கேட்டிங் போட்டியானது நடத்தப்பட உள்ளது. அனைத்து போட்டி ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.