State-level skaters Selection Competition: Perambalur MLA R. Tamilselvan inaugurated .
பெரம்பலூர் : பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிலான ஸ்கேட்டிங் தெரிவுப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா; வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.
இன்று நடைபெற்ற இத்தெரிவுப் போட்டிகளில் U-11/14/17/19 மாணவிகளுக்கு வயது மற்றும் பிரிவு வாரியாக தனித்தனியே நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 76 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 6 மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியர்கள் 26.12.2018 முதல் 30.12.2018 வரை கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் என்ற இடத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், நாளை 29.09.2018 மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் தெரிவுப் போட்டிகளும், 30.09.2018 காலை 6.00 மணி அளவில் மாணவ, மாணவிகளுக்கான சாலையோர ஸ்கேட்டிங் தெரிவு போட்டிகள் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.