Strike on Sep 2: The Tamil Nadu Government Employees Association Announcement
பெரம்பலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நார்பில் வரும் செப்.2ந்தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்பவும், 8வது ஊதியக் மாற்றத்திற்கான குழு அமைத்திடவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும், அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வது, அரசுத் துறைகளை தனியார் மையமாக்குவதை தடுத்து நிறுத்தவும், வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தவும், மாநில அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிடவும், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், தினக்கூலி, தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.