Students’ exhibition at the Arutra Matriculation School
பெரம்பலூர், துறைமங்கலம் தீரன் நகர் அருகே உள்ள ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளியில் 1-வது வகுப்பு முதல் 9-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது சிந்தனை படைப்புகளை அவரவர் பயிலும் வகுப்பறையிலேயே (திங்க் ரூம்) கண்காட்சியாக இடம் பெறச் செய்தனர்.
இதில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தகவல்தொடர்பு, வணிகம், இலக்கியம், மொழித்திறன், உரையாடல் கலை, உலகியல் உண்மைகள், சாலை போக்குவரத்து விதிகள், மேதைகளின் பொன்மொழிகள், வானிலை மாற்றங்கள், காடுகளை வளர்த்து சுற்றுச் சூழலை பேணிக்காத்தல் உள்ளிட்ட எண்ணற்ற தங்களது படைப்பு திறனை வெளிப்படுத்தினர்.
மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மதுபோதை விழிப்புணர்வு குறும்படங்களை தாங்களே தயாரித்து அதனை திரையிட்டனர்.
பள்ளி நிர்வாக இயக்குனர் கணேசன் தலைமை படைப்பு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பள்ளி செயலாளர் மருதப்பன், இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
படைப்பாக்க கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மலர்விழி தலைமையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.