Students march at Perambalur for the World Disaster Reduction Day
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 13ம் நாள் உலக பேரிடர் குறைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (13.10.2017) வருவாய் பேரிடர் மேலாண்மை தணிக்கும் துறையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
பேரிடர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரிடர் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் பேரிடர் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், பேரிடர் குறித்த கோஷங்களை எழுப்பியவாறும், நகரை வலம் வந்தனர்.
அப்போது அருந்துவோம், அருந்துவோம்.. மழைக்காலத்தில் கொதிக்க வைத்த குடிநீரை அருந்துவோம். துண்டிப்போம், துண்டிப்போம்… தீ விபத்து, இடி மின்னலின்போது மின் இணைப்பை துண்டிப்போம். செல்வோம் செல்வோம், நிலநடுக்கம் அறிகுறி தொpந்தவுடன் வீட்டிற்கு வெளியே திறந்தவெளி பகுதிக்கு செல்வோம்.
சேமிப்போம் மழைக்காலத்தின்போது மழைநீரை சேமிப்போம்… தெரிவிப்போம், தெரிவிப்போம்… பேரிடர் செய்திகளை கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 1800 425 4556-க்கு தகவல் தெரிவிப்போம்… தவிர்ப்போம், தவிர்ப்போம், வெள்ளள நீரில் குளிப்பதை தவிர்ப்போம்… வேண்டாம், வேண்டாம்… இடிமின்னலின்போது செல்போன் பயன்படுத்தவேண்டாம்…. உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. இப்பேரணியில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனா;.
அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, பாதுகாப்பாப தீபாவளி கொண்டாடுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தீயணைப்பு துறையினர், வருவாய் துறை மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் இருந்தனர்.