Subsidized loan for SC – ST farmers to grow fodder and buy lawn mowers; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட திட்டத் தொகை ரூ.3,00,000 லட்சத்தில் 30% அதாவது ரூ.90 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத் தொகை சென்றடைய, ஆதி திராவிட தனி நபர்களுக்கான திட்டத் தொகையில் 30% அல்லது அதிகபட்சம் ரூ.2,25,000 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.3,75,000 லட்சம் மானியம் விடுவிக்கப்படும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது.

மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் செய்ய பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினைப் பெற்று புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் (http://application.tahdco.com. http://fast.tahdco.com) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-276317 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!