Suspicious death of Perambalur biryani shop owner! Police investigation!

பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள செல்வா நகர் டாஸ்மாக் கடைக்கு வடக்குப் பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக இன்று காலை வந்த தகவலின் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நன்னை கிராமத்தை சேர்ந்த, செல்லப்பிள்ளை மகன் சேகர் ராஜு (34) என்பது தெரியவந்தது, அவர் பெரம்பலூரில், 4ரோடு, புதிய பேருந்து நிலையம், தண்ணீர் பந்தல் ஆகிய இடங்களில் தலைப்பாக்கட்டு பிரியாணி என்ற பெயரில் பிரியாணி நடத்தி வருவதும், அவர் நேற்று காலை சுமார் 10 மணி அளவில், சிறுவாச்சூர் செல்வதாக சென்றவர், இன்று காலை இறந்து கிடப்பதும் தெரியவந்தது. சேகர் ராஜு அருகில் மது பாட்டில்களும், பூச்சி கொல்லி மருந்து டப்பாக்களும் கிடந்தது. அவரே மது விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது யாராவது கொலை செய்யும் விசம் ஊற்றி கொடுத்தனரரா, என்றும் அல்லது கொரோனா கால கடன்சுமையால், தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப பிரச்சரனையால் தற்கொலை கொண்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சேகர் ராஜுன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரியாணி கடை உரிமையாளர் மரணமமைந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.











kaalaimalar2@gmail.com |
9003770497