Tali flag flush with a woman who went alone on the road! Perambalur police are investigating !!

கற்பனை காட்சி
பெரம்பலூர் அருகே 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு, சாலையில் தனியாக மொபட்டில் வந்த பெண்ணிடம் தாலிக்கொடியை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் அசோகன், இவரது மனைவி கலையரசி (41), இவர் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வருகிறார். இன்று எசனை கிராமத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு பணிக்கு சென்று விட்டு, பெரம்பலூருக்கு மொபட்டில் கோனேரிப்பாளையம் – தண்ணீர்பந்தல் செல்லும் சுற்றுச் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ( ப்ளூ சட்டை வெள்ளை பேண்ட்) கலையரசியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்ததில் 5 பவுன் தாலிக்கொடி கொள்ளையனின் கையில் சென்றுவிட்டது, தாலி காசு மட்டும் கலையரசி கையில் பிடித்துக் கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.