Tamil Nadu Chief Minister M.K.Stalin inaugurated Rs.18.93 crore new sub-station for Perambalur district: Rs.1.73 crore transformers through video presentation.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக பெரம்பலூர் துறைமங்கலம் துணை மின் நிலையத்தில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் 16 மெகாவாட் அதிக திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றியினையும் மற்றும் கை.களத்தூர் பகுதியில் ரூ.18.99 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையத்தினையும் இன்று திறந்து வைத்தார்.

கலெக்டர் வெங்கட பிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் துறைமங்கலம் துணை மின் நிலையத்தில் குத்து விளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், பெரம்பலூர் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள 110/22 கி.வோ துணை மின் நிலையத்தில் ஏற்கனவே உள்ள 10 மெகாவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றியினை 1.73 கோடி மதிப்பீட்டில் 16 மெகாவாட் அதிக திறன் கொண்ட மின்மாற்றியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியால் பெரம்பலூர் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூர் சாலை, அரணாரை, அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம், அரியலூர் மெயின் ரோடு, அன்பு நகர், அண்ணாமலை நகர், ராஜா நகர், கவுள்பாளையம், காவலர் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, அருமடல் ரோடு தொழிற்சாலை பகுதிகளில் உள்ள 40,386 மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கிருஷ்ணாபுரம் உப கோட்டத்தில் உள்ள கை.களத்தூர் பகுதியில் ரூ.18.93 கோடி செலவில் புதிய 110/22 கி.வோ திறன் கொண்ட திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தின் மூலம் நூத்தப்பூர் ,பாளையம், கைகளத்தூர், சிறு நிலா, நெற்குணம் காலனி, காரியனூர், வெள்ளுவாடி, பில்லாங்குளம், பெருநிலா, அய்யனார்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 8,324 மின் நுகர்வோருக்கு இதன்மூலம் சீரான மின்சாரம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, செயற்பொறியாளர் (பொது) சேகர், செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன், பெரம்பலூர் யூனியன் மீனாஅண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் மகாதேவிஜெயபால் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!