Teacher Day Celebration at Siruvachur Almighty Vidyalaya Public School near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் ஆசிரியர் தின விழா நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சாரதா செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளிமாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகளும் ஆசிரியைகளின் பேஷன்ஷோ மற்றும் கேம் ஷோவும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகளை பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் வழங்கி தாயின் கருவறை உணர்த்துவது அன்பு, பள்ளியில் ஆசிரியர்கள் உணர்த்துவது அறிவு குறித்து சிறப்புரை ஆற்றினார். ஆசிரியைகள் சந்திரோதயம், ஜாய்ஷகிலா, ஹேமா, சுமதி ஆசிரியர்கள் மணிகண்டன், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.