The Chief Minister in your constituency provided welfare assistance of Rs.10.34 crore under the scheme, Minister SS Sivasankar

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட மேலமாத்தூரில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 431 நபர்களுக்கு ரூ.10.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கிய அவர் தெரிவித்தாவது:

மாவட்ட ஆட்சித்தலைவர; திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர;கள், பெரம்பலூர; சட்டமன்ற உறுப்பினர; திரு.எம்.பிரபாகரன் அவர;கள், மாவட்ட ஊராட்சி தலைவர; திரு.சி.ராஜேந்திரன் ஆகியோர; முன்னிலையில் இன்று (16.07.2021) வழங்கினார;.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடன், தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த 7.5.2021 அன்று பொறுப்பேற்றவுடன், ‘எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம்”” என்ற உயரிய நோக்கத்தோடு தமிழக மக்கள் தங்கள் வாழ்வில் வளம்பெரும் வகையில் 5 முத்தான திட்டங்களுக்கு கையெழுத்திட்டு அரசாணை பிறப்பித்தார்கள்.
அதில் முதன்மையானதாக மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலர் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகள் நிறைவேற்றப்படுவதற்கான ஆணையினை பிறப்பித்துள்ளார்கள்.

அதன்படி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் நியமிக்கப்பட்ட சிறப்புப்பணி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பிரிவிற்கென ஒரு இணையதளம் துவங்கப்பட்டு அதில் மனுக்களின் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தினை (18.05.2021) அன்று துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் (03.06.2021) அன்று தலைமைச் செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,703 மனுக்கள் பெறப்பட்டு அவற்றுள் 1,190 மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு முதற்கட்டமாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர; திட்டத்தின் கீழ் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 260 நபர;களுக்கு ரூ.6.26 கோடி மதிப்பீட்டிலும், பெரம்பலூர; சட்டமன்ற தொகுதியில் 171 நபர்களுக்கு ரூ.4.08 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 431 நபர்களுக்கு ரூ.10.34 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில், 22 நபர்களுக்கு ரூ.9.66 இலட்சம் மதிப்பிலான பட்டா மாறுதல் ஆணையும், 10 நபர்களுக்கு ரூ.3,71,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைக் பட்டா ஆணையும், 217 நபர்களுக்கு ரூ.2.60 கோடி மதிப்பிலான மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையும், 2 நபர்களுக்கு ரூ.4.20 இலட்சம் மதிப்பிலான பசுமை வீட்டிற்கான ஆணையும், 31 நபர்களுக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.52.70 இலட்சம் மதிப்பிலான ஆணையும், பொது கோரிக்கைகள் தொடர்பாக 65 நபர்களுக்கு ரூ.6.92 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களையும், 78 நபர்களுக்கு ரூ.11.60 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 431 நபர்களுக்கு ரூ.10.34 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள மனுக்கள் (அரசின் நிதி ஒதுக்கீட்டிற்காக) 370 மனுக்கள் உள்ளிட்ட நிலுவையில் உள்ளன. 1,530 மனுக்கள் ஏற்கப்பட்டு விரைவில் தீர்வு வழங்கப்படவுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர; திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மீதம் உள்ள மனுக்கள் சரியான முறையில் பரிசீலினை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்களை பெறும் அலுவலர்கள் மனுக்களின் உண்மை தன்மைகளை உறுதி செய்த பின் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனி நபர் கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது இடைக்கால பதில்களை வழங்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். தவறுதலாக பெறப்படும் மனுக்களை உரிய துறைக்கு வழங்கி உறுதி செய்திட வேண்டும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் மனுக்களின் குறைகள் களையப்படுவதை தொடர்புடைய அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இது போன்ற திட்டங்களை முறையாக பயன்படுத்தி தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

பின்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொரோனா நோய்த் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், வேல்டு விஸன் தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் 10ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், 25 கட்டில் மற்றும் படுக்கைகள், 180 பி.பி கிட் ஆகியவற்றை அதன் நிர்வாகிகள் வாலிகண்டபுரம் அரசு மருத்துவமனைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டி.ஆர்.டி.ஓ. மூலம் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் விடுத்த கோரிக்கையினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் துறையைச் சேர்ந்த இயந்திரவியல் மற்றும் உற்பத்தித் துறை முன்னாள் மாணவர்கள் (1992-96ம் ஆண்டு) ரூ.1.2 லட்சம் மதிப்பீட்டில் வழங்கிய 20 இருக்கைகளை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலார் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மீனா, பிரபா, மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்தமிழ்செல்வி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைதலைவர் சாந்தாதேவி, மு.சுசிலா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மதியழகன், அருள்செல்வி, தேவகி, கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி, உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு பணியாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், அண்ணாதுரை, நல்லதம்பி உள்பட பலர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சரின் வருகைக்காக அரசு அதிகாரிகள், கட்சியினர், பயனாளிகள், பொதுமக்கள், போலீசார், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்து கிடந்தனர். விழா நடத்தும் அரசு பணியாளர்கள் உரிய நேரத்தை உறுதி செய்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை ஏற்பாடு செய்தால், பல முக்கிய அதிகாரிகள், பொதுமக்களின் பணி நேரம் மற்றும் மனித உழைப்பை வீணாகமல் தடுக்கலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!