The cycle of competition in Perambalur on Celebrating Anna 110th birthday.

பெரம்பலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்டப் பிரிவின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டி போட்டிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ரவுண்டானாவிலிருந்து பாலக்கரை சென்று மீண்டும் ரவுண்டானா வந்தடைவதற்கான வழித்தடத்தில் 12.09.2018 அன்று காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவஃமாணவியர்கள் தங்களது சொந்த செலவில் மிதி வண்டி கொண்டு வருதல் வேண்டும். மாணவ – மாணவியர்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும்.

வீரர் – வீராங்கனைகள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான வயது வரம்பு (6,7, 8-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்) ஆகும்.

15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு ((9, 10-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்) ஆகும்.

17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு (11, 12-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்) ஆகும்.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் – வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டமைக்கான தகுதிச் சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்படும்.

எனவே, சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியர்களை பள்ளி வயது சான்றிதழுடன் 12.09.2018 அன்று காலை 6.30 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும், என பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!