The District Collector gave applications to the eligible beneficiaries to start a new business with subsidy under Government scheme.
perambalur-dic-20160125பெரம்பலூர்: வடகிழக்குப் பருவமழையினால் ஏற்ப்பட்ட வெள்ளள பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு ஒட்டு மொத்த தமிழ்நாடும் வெள்ளம் பாதித்ததாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், ஏற்கனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்க தமிழக அரசு அறிவுறித்தியதை தொடர்ந்து, படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந் தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியிலிருந்து விலக்கு அளித்து 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கப்படும்.

அதன்படி, திட்ட மதிப்பில் 25 விழுக்காடு அரசு மானியத்துடன் ரூ.5 இலட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வரை முறையே உற்பத்தி (அ) சேவை (அ) வியாபார தொழில் உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்களை துவங்கிட கடன் வழங்கப்படுகிறது. இதில் முதலீட்டாளரின் பங்கு பொதுப் பிரிவினர்க்கு 10 விழுக்காடும், பட்டியல் இனம், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு (அ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (அ) சிறுபான்மையினர் (அ) மகளிர் (அ) முன்னாள் படைவீரர் மாற்றுத் திறனாளிகள், திருநங்கை உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர்க்கு 5 விழுக்காடும் ஆகும்.

25.01.2016, 27.01.2016 மற்றும் 29.01.2016 ஆகிய 3 நாட்கள் மாவட்ட தொழில் மையம் ஏற்பாடு செய்துள்ள பயனாளிகள் தேர்விற்கான சிறப்பு முகாமில், தொழில் தொடங்க ஆர்வமுள்ள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிகளவில் பங்குபெற்று விண்ணப்பங்களை பெற்று புதியதாக தொழில்களை துவங்கி அதன் மூலம் வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் துரை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் து.ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!