Prosopis juliflora tree removal work, the district’s chief judge personally inspected

மதிமுக பொதுச் செயலாளளர் தொடர்ந்த வழக்கின் பேரில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை சீமை கருவேல மரங்களை அகற்ற உத்திரவிட்டது. அதன்படி, பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் ஏரி, சிறுவாச்சூர், மதுரகாளியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் எளம்பலூர், உப்போடை பகுதியில் உள்ள நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும், பின்னர், குன்னம் வட்டத்திற்குட்பட்ட லப்பைக்குடிகாடு அருகே உள்ள அரங்கன்பாதியில் உள்ள ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதையும் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் சஞ்சீவி பாஸ்கர், குற்றவியல் நீதித்துறை நடுவர் சுஜாதா, மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!