The draft Voters List: the meeting of all party leaders

பெரம்பலூர் : வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர்(தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 05.01.2017 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் தொகுதியில் 2,81,073 வாக்காளா;களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,58,442 வாக்காளர்களும் என மொத்தம் 5,39,515 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பின்னர், நடைபெற்ற தொடர் திருத்தம் மற்றும் சிறப்பு திருத்தம் ஆகியனவற்றில் பெறப்பட்ட பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் தொடர்பான விண்ணப்பங்கள் மீது, விசாரணை செய்து, முடிவு செய்யப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 03.10.2017 அன்று வெளியிடப்பட உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2018 அன்று தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும், 03.10.2017 முதல் 31.10.2017 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிடப்பட்டுள்ளது.

08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய 2 தினங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்திடவும், அன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலில் ஏதேனும் விடுதல் இருப்பின் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெற ஆணையிட்டுள்ளது.

அதன்படி, 01.01.2018 அன்று 18 வயது பூர்த்தி அடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் அளித்து பயன்பெறலாம், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன்(பெரம்பலூர்), தமிழரசன் (குன்னம்), சீனிவாசன் (ஆலத்தூர்), பாரதிவளவன் (வேப்பந்தட்டை), சிவா (தேர்தல் பிரிவு) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் அதனுடைய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!