the explosion of sons near Perambalur, father in law between daughter-in-law disputes: daughter-in-law committed suicide!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வரதராஜன் – திவ்யா (23), தம்பதியினர் இவர்களுக்கு திருமணமாகி ஆறரை வருடம் ஆகிறது. சந்தோஷ், சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். வரதராஜன் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இன்று தீபாவளி பண்டிகையையொட்டி திவ்யாவின் மகன்கள் இருவரும் வெடி வெடித்து உள்ளனர். இதனை திவ்யாவின் மாமனார் முத்துசாமி கண்டித்துள்ளார். அப்போது மாமனார் மருமகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த முத்துசாமி தகாத வார்த்தையில் திவ்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த திவ்யா வீட்டினுள் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் திவ்யா மூன்று மாத கர்ப்பிணி என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட திவ்யாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்கள் அசூர் கிராமத்திற்கு நேரில் சென்று வரதராஜனின் ஓட்டு வீட்டை கற்களால் தாக்கி சேதப்படுத்தி சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!