The garbage in Perambalur was sent to the cement plant to burn
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் சேகரமாகும் குப்பைகள் தனியார் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுவதாக ஆட்சியர் அலுவலக சார்பில் தெரிவிக்ப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மழைநீர் தேங்காமல் வடிகால்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. மேலும், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து சேகரமாகும் குப்பைகள் அனைத்தும், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் சேகரிக்கப்பட்டு, குப்பைக்கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சேகரமாகும் குப்பைகளால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுவதற்கு காரணமாக இருப்பதை தொடர்ந்து, குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து நெடுவாசல் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக், டயர்கள் உள்ளிட்ட குப்பைகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பார்வையிட்டார்.
இக்குப்பைகள் அனைத்தும், சிமெண்ட் ஆலையில் உள்ள சூலைகளில் கொட்டப்பட்டு எரியூட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.