The human body is made to keep the wizard’s plea to arrest mantirikam


பெரம்பலூரில் சடலத்தை வைத்து ஆவிகளுடன் பேசுவது உள்ளிட்ட பல்வேறு சித்து வேலைகளை செய்து மந்திரவாதி உள்பட நான்கு பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி பின்புறம் உள்ள எம்.எம். நகரில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். வீட்டில் சுமார் 3 மாதம் ஆன பெண் சடலம் பதப்படுத்தி வைத்து மாந்தீரம் செய்யப்பட்டு வந்து இருப்பது தெரிய வந்தது. மந்திரவாதியான பெரம்பலூர் கல்யாண் நகரைச்சேர்ந்த சேகர் மகன் கார்த்திக் (வயது 33) வீட்டை மாத வாடகை ரூ. 20 ஆயிரத்திற்கு எடுத்து சுமார் மூன்றரை ஆண்டுக்கு மேல் குடியிருந்து வருவதும், அந்த வீட்டில், பில்லி சூனியம், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பது, பெண்களை வசியம் செய்வது, ஆண்களை வசியம் செய்வது மற்றும் பல்வேறு பிரச்சனைகளை மந்திரம் மூலம் தீர்த்து வைப்பதாக கூறி தமிழகம், ஆந்திரா, கர்நாடாக, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்ததும் தெரிகிறது. இவர்களுக்கு மாந்தீரீகம் செய்ய சடலத்தை சென்னையில் விலைக்கு வாங்கியதாக மந்திரவாதி கார்த்திக் போலீசில் தெரிவித்துள்ளார். மந்திர புத்தகங்கள், மண்டை ஓடுகள், எலும்புகள் போலீசார் ககைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து போலீசார் இறந்த சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது மருத்துவமனையில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றனர். அப்படியானல், அந்த இளம்பெண்ணின் சடலம் விற்பனை செய்த மருத்துவ பணியாளர்கள் யார் யார் என்ற கோணத்திலும், சடலத்தை வாங்கி உறுதுணையாக இருந்த தரகர்கள் யார் யார் என்றும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் யார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், அவரை யார் அழைத்து வந்து நரபலி கொடுத்தார்களா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால் பெரம்பலூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மந்திரவாதியுடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகள் பலரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், கோவா, புதுச்சேரி, ஆந்திராவை சேர்ந்த இளம் பெண்களும் அடிக்கடி வந்த சென்றதாகவும் கூறப்படுகிறது. இறந்தது அந்த பெண்களில் யாராவது நரபலி கொடுக்கப்ட்டாரா என்ற கோணத்திலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மந்திரவாதின் பின்புலத்தில் செல்வாக்கு படைத்த அரசியல்வாதிகள், தொழிலபதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் வந்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதே போன்று கடந்த ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் அருகே உள்ள மருதடி கிராமத்தில் நரபலி கொடுக்கப்படுகவதாக கூறி பொதுமக்களே, பாடாலூர் போலீஸார் குடிலுக்குள் சென்று ஆய்வு செய்ததில், மந்திரவாதி கார்த்திக் உள்பட , பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சேட் மகன் சித்திக் (34), வடக்குமாதவி சாலையைச் சேர்ந்த ஷாஜகான் மகன் சலீம் (28), எளம்பலூர் சாலையைச்சேர்ந்த அஹமதுபாஷா மகன் சாதிக் (27),சேலத்தை சேர்ந்த தெய்வமணி மகன் ராம்குமார் (28) ஆகிய 6 பேரை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்து போன சடலத்தை வைத்து மாந்தீரீகம் செய்வதாக கூறி நபர் சடலத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!