The largest executive of the Tiruchengode Co-operative Society in South East Asia is the swearing-in ceremony
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்று விழா நடைபெற்றது.
திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. மல்லசமுத்திரம், இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டு செயல்படும் இந்த கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதனால் தென்கிழக்கு ஆசியாவின் பெரிய கூட்டுறவு சங்கமாக திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு விற்பனை சங்கம் விளங்குகிறது. இந்த சங்கத்துக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 9 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக திருமூர்த்தி, துணைத்தலைவராக ராணி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சபரி தங்கவேல், சிவசாமி, எஸ்.சரவணன், ஆர்.சரவணன், தனசேகரன், மணி, அன்னக்கிளி, இன்பதமிழரசி, வனிதா ஆகியோர் பொறுப்பேற்றனர்.
பதவியேற்பு விழாவிற்கு மேலாண் இயக்குனர் ரவிக்குமார் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பொன்.சரஸ்வதி, சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் நகர பிரமுகர்களும், அதிமுகவினரும் கலந்து கொண்டனர்.