The lightness of the Government on behalf of the children’s special medical camp in perambalur districts
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் திட்ட அலுவலர் முத்துமீனாள் தெரிவித்துள்ளதாவது:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் அனைத்து வட்டாரங்களிலும் எடை குறைந்த குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 07.09.16 மற்றும் 08.09.16 ஆகிய தினங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய உணவுப்பொருட்கள் உட்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்து எடை குறைவு எதனால் ஏற்படுகிறது என்பதையும், குழந்தைகள் வயதிற்கேற்ற எடை இருக்கிறார்களா என்பதையும் பரிசோதனை செய்ய உள்ளனர். மேலும் ஒவ்வொரு குழந்தையும் சரியான எடை இருப்பதன் அவசியத்தை ஒவ்வொரு தாய்மாருக்கும் எடுத்துக்கூறி, எடை குறைந்த குழந்தைகளுக்கு இரும்பு சத்து மாத்திரை (சிறியது), பொட்டுக்கடலை, நெய், நாட்டுச் சர்க்கரை ஆகியன ஒவ்வோரு குழந்தைக்கும் தனித்தனியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம்கள் நாளை (07.09.16) வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், நளை மறுநாள் (08.09.16) ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்டபட்ட குழந்தைகளுக்கும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
எனவே குழந்தை பெற்றெடுத்த ஒவ்வொரு தாய்மாரும் தங்களுடைய குழந்தைகள் வயதிற்கேற்ற சரியான எடை அளவில் உள்ளனவா என்பதை இம்முகாம்கள் மூலமாக தெரிந்து கொண்டு, எடை குறைவான குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைகளையும் பெற்று பயனடைய வேண்டும், என தெரிவித்துள்ளார்.