the Medical Camp in Perambalur Legal Services Commission.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இன்று நீதிமன்ற ஊழியர்களுக்கும், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் பயன்பெபறும் வகையில் இலவச மருத்துவ முகாமை பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடத்தியது.
முகாமை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மருத்துவ துறையை சார்ந்தவர்களும் தங்களது உடல்நலத்தில் அக்கரை செலுத்துவதில்லை என்று வருத்தம் தெரிவித்தார். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் எனும் பழமொழிக்கேற்ப அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களது உடல் நலத்தை காத்துக் கொள்ள வெண்டும். அதற்கு இது போன்ற மருத்துவ முகாமை இலவசமாக அணுகி பயன்படுத்திக் கொள்ள வெண்டும். பெற்றொர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயது முதல் நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்து விளையாட்டில் ஈடுபாடுகாட்டி வளர்த்தால் எதிர்காலம் வளமாக இருக்கும் என்றும்,
தொடர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மருத்துக் கல்லூரியை அணுகி பயன் பெறலாம் என்றும் தெரிவித்தார். இனி வருங்காலங்களில் மருத்து முகாம்கள் நிறைய எண்ணிக்கையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
மருத்துவ முகாமில் மகிளா நீதிமன்ற நீதிபதி திரு.என்.விஜயகாந்த், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.ஜி.சங்கரநாராயணன், தலைமை நீதித்துறை நடுவர் ஏ.முரளீதரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியுமான எம்.வினோதா, நீதித்துறை நடுவர் கே. மோகனப்பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.கருப்பசாமி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இ.வள்ளுவன்நம்பி, அட்வகெட்ஸ் அசொசியெசன் சங்க தலைவர் ஏ.முகமது இலியாஸ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் எம்.சுந்தரராஜன், மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.ராதாகிருஷ்ணமூர்த்தி, திரு.ஆர்.மணிவண்ணன், ஜி.பாபு, அரசு வழக்கறிஞர்கள் சி.கணேசன், எஸ்.பாலமுருகன், கதிர்.கனகராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், 162 நபர்கள் கலந்து கொண்டு, கண், இருதயம், இசிஜி, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் சோதனைகளை செய்து பயன்பெற்றனர்.
முகாமில் பொதுமருத்துவர் விஜய் ஆனந்த், நெஞ்சகநிபுணர் பிரகாஷ், கண்மருத்துவர் பிரகாஷ், மகப்பேறு மருத்துவர் சிவரஞ்சனி ஆகியோர் கொண்ட குழுவானது மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அளித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் டி. வெள்ளைச்சாமி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.