The northeast monsoon: unprotected tenants plea to migrate instruction collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வகையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணிக்கவும், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லவும் போதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலரும், கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியரும், வட்ட அளவில் சம்மந்தப்பட்ட வட்டங்களின் சமூகப்பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்களும் பொறுப்பு அலுவலர;களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மட்டுமல்லாது துறைகளுக்கிடையான மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக அளவிலான மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்களை சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மாணவர் விடுதிகள், பள்ளிவாசல்கள் என அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றது.

சம்மந்தப்பட்ட கட்டடங்களின் பொறுப்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள குழுக்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 47 கிராமங்களிலும் இதுபோன்ற ஏற்பாடுகள் முழுவதும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1.10.2017 முதல் 6.11.2017 வரை 16 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளது. இதில் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட 2 வீடும், வேப்பந்தட்டை வட்டத்திற்குபட்ட பகுதிகளில் 2 வீடுகளும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 9 வீடுகளும், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 வீடும் என மொத்தம் 15 வீடுகள் பகுதி அளவிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கோரையாறு பகுதியில் பெருமாள் மகன் பூவான் என்பவரது வீடு முழுவதுமாகவும் சேதமடைந்தது.

இதுபோன்று மழையால் பாதிக்கப்பட்டு பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4,100ம், முழுவதுமாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5000ம்; வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலுhர; மாவட்டத்தில் ஏற்பட்ட மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் ஆய்வு செய்து, இதுவரை முழுவதும் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ.5000ம், பகுதியளவில் பாதிக்கப்பட்டதில் 4 நபர்களுக்கு தலா ரூ.4,100ம் மற்றும் வேட்டி,சேலை, 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு அரசின் நிவாரணங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் மழைக்காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் வசிக்கும் வீடு சேதமாகும் சூழ்நிலையில் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!