The nutrition awareness rally was started by the Collector of Perambalur district.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட அலுவலக நுழைவு வாயில் முன்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் தேசிய ஊட்டச்சத்து மாதம் (Poshan Abhiyaan) செப்டம்பர் 2018 கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை பாலக்கரையிலிருந்து இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் “விண்ணிற்கு செல்லும் பெண்கள் இருக்க, மலம் கழிக்க வெளியில் செல்வதா?”, “உண்போம், உண்போம், இரும்பு சத்துள்ள உணவை உண்போம்”, “தடுப்போம், தடுப்போம், ரத்த சோகை நோயை தடுப்போம்”, “சாப்பிடுவீர், அயோடின் சத்துள்ள உணவுகளை, பெற்றிடுவீர் அறிவும், ஆற்றலும் உள்ள குழந்தைகளை”, “மண்ணுக்குத் தேவை உரச்சத்து, பெண்ணுக்குத் தேவை இரும்புச் சத்து”, “பெண்ணின் பெருமை, மண்ணின் மகிமை”, “பெண்மையை போற்றுவோம், வாழ்வில் முன்னேறுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு, பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து தொடங்கி ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உணவு பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள உணவுப் பொருட்கள் குறித்தும், அதிலுள்ள சத்துக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், ஊட்டச்சத்து மாத உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சாந்தா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த உறுதிமொழியில் “நான் இன்று இந்தியாவின் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீட்டு, வலுமையானா;களாக மாற்ற உறுதிமொழி ஏற்கிறேன். ஆரோக்கியம் என்றால் சத்தான உணவு, தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் ஆகும். தேசிய ஊட்டச்சத்து மாதத்தின்போது, நான் இந்த கருத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து சென்று சேர்ப்பேன்.

நான் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை ஒரு தேசிய அளவிலான மக்கள் இயக்கமாக உருவாக்குவேன். ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலும், கிராமத்திலும், நகரத்திலும் ஊட்டச்சத்து மகத்துவத்தை பேரொலியாக எழுப்புவேன். இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம் பாரத நாட்டின் சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவெடுப்பர். இது என் சபதமாகும். ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும்” என்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மேற்காணும், நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, திட்ட இயக்குநர் (ஊராக வளர்ச்சி முகமை) தி.ஸ்ரீதர், வருவய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி, பெரம்பலூர் வட்டாச்சியர் பாரதிவளவான், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி மேற்பார்வையாளர்கள், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!