The Nutrition Employees Union to protest against road traffic protests in Namakkal for full time Workers

முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிகையை வலியுறுத்தி நாமக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சின்னப்பையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடேசன், மாநில துணைத்தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கோரிக்கை விளக்கி பேசினர். அதில், சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

குடும்ப பாதுகாப்புடன் அகவிலைப்படியுடன் கூடிய மாத ஓதிவூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஒரு மாத ஊதியம் பொங்கல் போனசாக வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக நீட்டித்து வழங்க வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!