The old notes will come into use until the new banknotes to the protests demanding will should allow
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் வரையில் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லதக்கதாக அறிவிக்க கோரி மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியூ அகஸ்டின், ஹெச்.எம்.எஸ் சின்னசாமி, எல்.பி.எஃப் ரெங்கசாமி, ஏ.ஐ.டி.யூ.சி தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் வரையில் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லதக்கதாக உத்திரவாதப்படுத்த வேண்டும்,
அனைத்து தொழில்களிலும், இம்மாத சம்பளத்தை வங்கியில் செலுத்தாமல், தொழிலாளர்கள் கையில் ரொக்கமாக வழங்க வேண்டும், வங்கிகளில் வாராக்கடனாக உள்ள 11 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும்,
சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணம் பதுக்கியோர் குறித்த விவரங்களை வெயியிட வேண்டும், அன்றாடச் செலவுகளுக்கு, வங்கி மற்றும் அஞ்சலக வாசல்களில் சாமானிய அவதிப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,
விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் வணிகங்கள் முடங்கி வருவதை தடுக்க வேண்டும், மாநில அரசு மவுனம் ககலைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் வட்டச் செயலாளர் வேல்முருகன் உள்பட ஏராளமான கட்சி , சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.