The Perambalur collector gave the subsidy to 25 fishermen fishing nets

fisher‘தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடித்திறனை மேம்படுத்தும் முகமாக” அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் ((NADP) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளுக்கான மானியத் தொகையாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலைகளை வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று (16.8.2016) வழங்கினார்.

2015-16ஆம் ஆண்டிற்கு உள்நாட்டு மீனவா;களுக்கு மீன்பிடி வலைகள் வாங்கியதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 20கிலோ எடையுள்ள ஒரு யூனிட் செவுல் வலை அல்லது இழு வலை வாங்குவதற்கான கொள்முதல் விலை ரூ.15000-ல்; 50 சதவீதம் அதாவது ரூ.7500ஃ-(ரூபாய் ஏழாயிரத்து ஐந்நூறு மட்டும்) மானியமாக வழங்கிடவும்,

இதே போன்று ரூ.5000- மதிப்புள்ள வீச்சு வலை வாங்குவதற்கான கொள்முதல் விலையில் ரூ.2500-(ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) மானியமாக வழங்கிடவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கு 29 பயனாளிகளில் முதற்கட்டமாக 25 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.7500- வீதமும், 05 பயனாளிகளுக்கு தலா ரூ.2500- வீதமும் ஆக மொத்தம் ரூ.1,62,500- (ரூபாய் ஒரு இலட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து ஐந்நூறு) மானியத் தொகையினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!