The person who lied the complaint to the missing house Documents, arrested

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோக்கவாடி, வரப்பாளையத்தைச் சேர்ந்த முத்து நாய்க்கர் மகன் தேவராஜ் (40) என்பவர் தனது வீட்டுமனைப் பத்திரம் காணாமல் போனதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு கொடுத்தார். காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு, இ.கா.ப., அவர்கள் மேற்கண்ட புகார் மனு மீது விசாரணை செய்து மேல் நடவடிக்கை எடுக்க, திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். காவல் ஆய்வாளரின் விசாரணையில், மேற்படி தேவராஜ், சுமார் 1½ வருடத்திற்கு முன்பு, தனது வீட்டுமனைப் பத்திரத்தை பொட்லிபாளையம், முத்து நாயக்கர் மகன் தனசேகரன் என்பவரிடம் ரூபாய் 5 லட்சத்திற்கு தனது தொழில் தேவைக்காக அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். தற்போது வரை கடன் தொகையையும், வட்டியையும் திருப்ப செலுத்தாமல், மேற்படி நிலத்தை விற்க முயற்சி செய்துள்ளார். அதற்கு அசல் பத்திரம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், அடமானம் வைத்திருந்த பத்திரத்தை மீட்க வேண்டியிருந்ததால், அவர் அடமானம் வைத்திருந்ததை மறைத்து, அந்த வீட்டு நிலத்தின் பத்திரம் காணாமல் போய்விட்டதாக ஒரு புகார் மனு தயாரித்து, அதன் மூலம் வேறொரு அசல் பத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்று வீட்டுநிலத்தை விற்றுவிட முடிவு செய்து ஒரு பொய்யான புகார் மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பொய்யான பகார் மனுவை கொடுத்து அதன் மூலம், பத்திரம் பெற்ற நிலத்தை விற்பனை செய்ய முயற்சி செய்த தேவராஜ் மீது திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!