The player who won the monthly tournaments, players Tiruchirappalli Regional senior manager R. Gitanjali ratnamala medals, certificates are presented.
பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நேற்று (21.07.2016) காலை 8.30 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவஃமாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கபடி ஆகிய பிரிவுகளின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்ட மாணவஃமாணவிகளுக்கு தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், 1500 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல். உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கான தடகளப்போட்டியில் 100 மீ பிரிவில் N. ஸ்ரீராம், 400 மீ பிரிவில் S. விஜய், 1500 மீ பிரிவில் S. மருதுபாண்டியும் முதலிடத்தை பெற்றனர்.
தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் எஸ். விஜய், குண்டு எறிதல் போட்டியில் சு. நவீன் குமார் முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் கவுண்டர்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் சு. நித்தியானந்தம் முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி; மாணவர் பு. மாணிக்கவேல் முதலிடத்தை பெற்றனர்.
மாணவியர்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் சு. சங்கீதா, 400 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் லு. ஆரோக்கிய எபெசியா, 1500 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் ஆ. தன்யா, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் N. நாகபிரியா,உள்ளிட்ட புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி; P.பிரித்தி முதலிடத்தை பெற்றனர்.
மாணவர்களுக்கான குழுப் போட்டிகளில் கைப்பந்து போட்டியில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெரம்பலூர் மாணவர் அணியினர் முதலிடத்தை பெற்றனர்.
கபாடி போட்டியில் அன்னை உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் அணியினர் முதலிடத்தை பெற்றனர்.
மாணவியர்களுக்கான குழுப் போட்டிகளில் கைப்பந்து போட்டியில் பெரம்பலூர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணியினர் முதலிடத்தை பெற்றனர்.
கபாடி போட்டியில் பீல்வாடி, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அணியினர் முதலிடத்தை பெற்றனர்.
மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகளில் 50 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி. செட்டிக்குளம் மாணவர் சு. பிரதீப் முதலிடத்தையும், 100 மீ ப்ரி ஸ்டைல்
போட்டியில் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சு. யாஸ்ஹஸ்வி குமார் முதலிடத்தையும், 200 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சு. யாஸ்ஹஸ்வி குமார் முதலிடத்தையும்,
50 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் செட்டிக்குளம் அரசு உயர் நிலைப் பள்ளி. மாணவர் சு. பிரதீப் முதலிடத்தையும், 200 மீ இன்டிவிஜுவல் மிட்லே போட்டியில் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சு. யாஸ்ஹஸ்வி குமார் என்பவர் முதலிடத்தையும், பெற்றனர்.
மாணவியர்களுக்கான நீச்சல் போட்டிகளில் 50 மீ ப்ரி ஸ்டைல் போட்டியில் பாடாலூர் அன்னை மேல்நிலைப் பள்ளி மாணவி அருள்மொழி முதலிடத்தையும், 50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் அனிதா அரசு உயர்நிலைப்பள்ளி பீல்வாடி மாணவி முதலிடத்தையும் பெற்றனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சிராப்பள்ளி மண்டல முதுநிலை மேலாளர் ரெ. கீதாஞ்சலி ரத்னமாலா பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராம சுப்பிரமணிய ராஜா, தடகளப் பயிற்றுநர் க.கோகிலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.