The public who caught the goat thief near Perambalur and handed him over to the police!
பெரம்பலூர் மாவட்டம், கொளப்பாடி பெட்ரோல் பங் அருகே உள்ள சந்தேகத்திற்குள்ள வகையில் மோட்டார் சைக்கிளில், ஆட்டை வைத்திருந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தில், வரிசைப்பட்டியை சேர்ந்த கண்ணாயிரம் மனைவி செந்தமிழ்செல்வி (50) என்பவரின் ஆட்டை தூக்கி வந்தது தெரியவந்தது. பின்னர், குன்னம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சிவா என்பது தெரியவந்தது. இது குறித்து, மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.