The resolution of the DMK probe team at the Namakkal district was set up by the Booth Committee to vote Polling Booth
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைப்பதென்று திமுக சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்குமாவட்ட திமுகவின் சார்பில் அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டஅலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருகிற பார்லி தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைப்பது, ஆளும்கட்சியின் ஊழல்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறுவது, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில மாணவரணி துணை செயலாளர் கவிகணேசன், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, ராணா ஆனந்த், நந்தகுமார், தமிழழகன், ராமலிங்கம், பெரியசாமி, பழனிசாமி, அறிவழகன், டாக்டர் பார்த்திபன், அய்யாவு, சாம்பத், ராஜேஷ்பாபு, கவுதம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.