The SDPI protesters condemned the government’s ban on beef
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாவட்டத் தலைவர் முகமது ரபீக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் வரவேற்றார். திருச்சி மாவட்ட செயலாளர் ஹசான் இமாம் கண்டன உரையாற்றினார். விசிக, நாம் தமிழர் கட்சி, மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் கனி நன்றி கூறினார்.