The social activists by in the perambalur authorities and opponents of giving the public agony!

perambalur_dt_mapபெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி ஏரி குளங்களில் மண் அள்ளுவோர்கள், ஆற்று படுகைகளில் மணல் திருடுவோர்கள், குவாரிகளில் கற்களை திருடுவோர்கள் பற்றி அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை அரசு அதிகாரிகளே சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளிடம் காட்டி கொடுக்கும் நிலைமை தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

இதனால், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சமூக விரோதிகளாலும், கொள்ளையர்களாலும், தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்டத்தின் உயர் அதிகாரியான கலெக்கடரிடம் பொதுமக்கள் தெரிவிக்க முயன்றாலும், முடிவதில்லை, முந்தைய கலெக்டர்கள் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. ஆனல், தற்போது புதிதாக வந்திருக்கும் கலெக்டர் நந்தக்குமார் முந்தைய கலெக்டர்கள் போல் அல்லாமல் தனக்கு தானே ஒரு வட்டத்தை வைத்து கொண்டு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போனில் கூட தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு இரும்பு வளைத்திற்குள் உள்ளார்.

இதற்கு முன்பு பெரம்பலூர் ஆட்சியர்களாக பணிபுரிந்த வடமாநிலத்திலர்கள் உள்பட வேறு மாநிலத்திவர்கள் கூட இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டனர். மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியை செய்ய கடமை தவறியதாலேயே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்ட முன் வருகின்றனர்.

மண், மணல், குவாரிகளில் கற்கள் முறைகேடாக நாள்தோறும் கொள்ளையடிப்பதில் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளதால் தொடர்பு உடையவர்களுக்கு தகவல் தெரிவிப்பவர்களை உடனடியாக அவர்கள் செல்போன் எண்கள், வாய்ஸ் ரெக்கார்டு போன்றவற்றை அனுப்பி காட்டி கொடுத்து விடுகின்றனர்.

கலெக்டர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் என்பது பொது மக்களுக்கு சேவை செய்யதான் என்பதோடு மட்டுமில்லாமல், கலெக்டர் பதவி என்பது அது ஒரு பரீட்சை என்பதை மனதில் கொண்டு, சம்பளம் வழங்கும் ஜனநாயத்தின் முதலாளிகளான பொதுமக்களையும், பொதுச் சொத்துக்களையும் காட்டி கொடுக்காமல், பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காட்டி கொடுக்கும் ஈன செயலை, கையாலாகாத அதிகாரிகள் கை விட வேண்டும் இல்லை என்றால் சமூக விரோதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தக்க பாடம் புகட்டுவார்கள்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!