The suicide of a woman who went home on leave due to family dispute at Perambalur!
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 33), குவைத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சுமதி (வயது 29) இவரது மகன் தருண்குமார் ( வயது 5), ஜீவி (வயது 3), ஆகியோருடன் குடும்பமாக குவைத்தில் வசித்து வருகிறார்.
3 மாத விடுமுறையில் சொந்தஊரான பெரம்பலூர் வந்துள்ளார். இன்னும் சில நாட்களில் குவைத்திற்கு திரும்பி செல்ல உள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு கணவன் மனைவி இருவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 11 மணி அளவில் வீட்டில் உள்ள கார் நிறுத்துமிடத்தில், சுமதி சேலையில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது.