அரும்பாவூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகே உள்ள அ.மேட்டூர் கிராமத்தில் பொது மக்கள் சார்பில் கட்டப்பட்ட மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது.
கோவில் முன் பகுதியில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.10ஆயிரத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ராமசாமி(65), அளித்த புகாரின் பேரில்
அரும்பாவூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.