பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் ஒரு கோவிலில் இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வரிசையாக நேர்த்திக் கடன் செலுத்த பூக்குழியில் இறங்கி மறுபகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (வயது 50) என்பவர் வெளிநாடு சென்று திரும்பி வந்திருந்தார். அங்கு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. குணமால் தீமிதிப்பதாக வேண்டிக் கொண்டார். இந்நிலையில் அவர் நேர்த்திக் கடன் செலுத்த முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் பூரண குணமானவுடன் அடுத்த ஆண்டு செலுத்த ஆலோசளை வழங்கி உள்ளனர். ஆனால், நேர்த்திக் கடன் செலுத்த முயன்று அக்னி குண்டத்தில் இறங்கினார். சற்று நேரத்தில் கால் தடுமாறி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!