The youth who grabbed the hand of the schoolgirl and asked him to talk to him was arrested under the pocso Act
பெரம்பலூர் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஜெயசூர்யா (20) என்ற இளைஞர் கடந்த ஒரு வருட காலமாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். திருப்பூரில் வேலை செய்து வந்த சூர்யா தற்போது ஊருக்கு வந்த நிலையில், இன்று காலை, பள்ளி செல்வதற்காக சக மாணவிகளுடன், நடந்து சென்று கொண்டிருந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து பேசுமாறு கூறினார்.. ஆனால் பேசாமல் பள்ளிக்கு சென்ற மாணவி, ஆசிரியரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இது குறித்து ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயசூர்யாவை கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.