Theaters unsanitary 3 per Rs. 10 thousand fine – Perambalur Collector

பெரம்பலூர் : தமிழகத்தில் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பராவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகத்தின் மூலம் புகைமருந்து அடித்தல், தண்ணீர் தேங்கவிடாமல் சரிசெய்தல், டெங்கு கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்தல் மற்றும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பராவமல் தடுக்க தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என்று தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுசெய்து வருகின்றார்.

இன்று பெரம்பலூர் நகரில் உள்ள திரையரங்குகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். திரையரங்குகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் வகையில் சுற்றுபுறத்தை வைத்திருந்ததற்காக அபராதத் தொகையாக தலா ரூ.10,000-ம் வீதம் மூன்று திரையரங்குகளுக்கு ரூ.30,000- அபராதத் தொகையாக விதித்து உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர், சுகாதாரத்துறை துணை இயக்குநர், நகராட்சி ஆணையர் , வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!